





சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தின் வளாகத்தில் ஒருங்கிணைந்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின்போது செய்தியாளரைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில பொருளாலர் கூறியதாவது; “எங்களுடைய பணியை நிரந்தரம் செய்து தரக் கோரி எங்களது தலைமை பொறுப்பில் உள்ளவர்களைப் பலமுறை சந்தித்து வேண்டுக்கோள் வைத்தோம்.
ஆனால் அவர்களோ அரசியல்வாதிகளைச் சந்தித்து உங்களது கோரிக்கைகளைக் கூறுங்கள் என்று கூறியதன் பின்னர், அவர்களைச் சந்திக்க பலமுறை முயன்றும் அவர்கள் எங்களை கண்டுக்கொள்ளாத சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கண்டுக்கொள்ளாத போக்கு தொடர்ந்தால் நாங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.” என்று கூறினார்.