மாணவிகள் மற்றும் பெண்களுக்கு சல்லாப ஆசாமிகளால் ஏற்படும் பாலியியல் தொந்தரவில் இருந்து பாதுகாக்க காவலன் எஸ்.ஒ.எஸ் 100 என்ற புதிய செல்போன் செயலி குமரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீப காலமாக போலீசாரால் என்ன தான் நடவடிக்கைகள் எடுத்தாலும் பெண்களுக்கெதிராக பாலியியல் தொந்தரவு நடத்து கொண்டு தான் இருக்கிறது. பாலியியல் தொந்தரவில் பாதிக்கப் பட்ட பிறகு தான் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடிகிறது. அல்லது பொது இடங்களில் பாலியியல் தொந்தரவு நடக்கும் போது மற்றவா்கள் போலீஸில் புகார் செய்தாலும் போலீசார் அங்கு வருவதற்குள் சல்லாப ஆசாமி அங்கிருந்து தப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாலியியல் தொந்தரவு நடப்பதற்குள் முன்கூட்டியே அதை தடுத்து அந்த சல்லாப ஆசாமியையும் கைது செய்யும் விதமாக தமிழக காவல்துறை காவலன் எஸ்.ஒ.எஸ் 100 என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியது. இதனை குமரி மாவட்டத்தில் எஸ்.பி ஸ்ரீநாத் அறிமுகம் செய்தார்.
பின்னர் அந்த செயலி பற்றி அவர் கூறும் போது... பெண்களும் பள்ளி கல்லூரி மாணவிகள் வயதான பெண்கள் ஆன்ட்ராய்டு செல்போனில் பிளே ஸ்டோரில் காவலன் எஸ்.ஒ.எஸ் 100 என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு சமூக விரோதிகளால் பாலியியல் மற்றும் ஏனைய துன்புறுத்தலுக்கு உட்படும் போது செல்போனில் எஸ்.ஓ.எஸ் பட்டனை அழுத்தியதும் பாதிக்கப்பட்ட நபரின் இருப்பிடம் மற்றும் அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் வீடியோவாக 15 வினாடிகளுக்குள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். பின்னர் அருகில் உள்ள காவல் ரோந்து வாகனம் அந்த இடத்துக்கு வரும். இதை இன்றிலிருந்து பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
Published on 01/09/2018 | Edited on 01/09/2018