திமுக சார்பாக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இவ்விழா முடிந்தவுடன் சென்னை மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பினை வெளியிட உள்ளது. இந்நிலையில், திமுக தலைமைக்கு சென்னை வட கிழக்கு மாவட்டச் செயலாளர் மீதான புகார்கள் குவிந்துள்ளதாகவும், இதன் மீதான விசாரணையை தலைமை கழக நிர்வாகிகள் துவங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னையில் கடந்த மாதம் தேர்தல் ஆணையாளர் தலைமையில் வட்ட கழகத் தேர்தல் மற்றும் பகுதி கழக தேர்தல் நடைபெற்றன. ஆனால், இதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக தலைமை கழகம் எதுவும் வெளியிடவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், திருவொற்றியூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி சார்ந்தவர்கள் பொறுப்புகளை பெற்று அதற்காக மாவட்ட செயலாளருக்கு தங்கள் சமூகவலைதளங்களில் நன்றி தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, மாவட்டச் செயலாளர் படமும், கிழக்கு பகுதி செயலாளர் படமும் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தொண்டர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு யாருக்குமே வட்ட பகுதி பொறுப்புகள் கொடுக்காமல், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும், பணம் கொடுத்தவர்களுக்கும் மட்டுமே பொறுப்புகள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து திமுக தலைமை கழக பொறுப்பாளர்களுக்கு புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் விசாரித்த தலைமை கழகம் மாவட்டச் செயலாளரிடம் தற்போது அவர் தயாரித்துள்ள பொறுப்பாளர் பட்டியலை கேட்டகவே, அதற்கு அந்த பட்டியலை தலைவரிடமே கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கழக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.