அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தற்பொழுது தொடங்கியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுகவின் கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான அனைத்து பதவிகளுக்கும் விரைவில் உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு முன்பாகவே உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி வியூகம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.