இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். இந்த இந்த சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கரோனா உயிரிழப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன்,
வேறு காரணத்தால் மரணித்தவர்கள் என சொல்லப்பட்ட 444 பேரின் உயிரிழப்பு கரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை மருத்துவர் வடிவேல் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் மார்ச் 1 முதல் ஜூலை 10 வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 ஆக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 பேர் சேர்க்கப்படும். 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர்.
அதேபோல் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர். சென்னை அரசு மருத்துவமனையில் 50 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டு அச்சம் கொள்ளவேண்டாம் என தெரிவித்தார்.