Published on 13/10/2020 | Edited on 13/10/2020
![incident in viruthachalam](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ib7kkNxYnRD5JrgptKii_mL6MyM2dlrJ0wBHs48BQpU/1602602066/sites/default/files/inline-images/Zxcadadaddadad.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் தனது 20 ஆடுகளை கொளப்பாக்கத்தில் இருந்து குப்பநத்தம் நோக்கி சாலையோரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
விருத்தாசலம்-நெய்வேலி சாலையில் சென்று கொண்டிருந்த போது நெய்வேலி நோக்கி சென்ற சாம்பல் லாரி அதிவேகமாக ஆட்டுமந்தைக்குள் புகுந்தது. இதன் காரணமாக சாலையோரம் மேய்ச்சலுக்கு சென்ற 14 செம்மறி ஆடுகள் மீது லாரி மோதியதில் தூக்கியெறியப்பட்டு தலை, உடல் நசுங்கி பலியாகின.
ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஆடுகள் வளர்ப்பவரின் கண் முன்னே துடிதுடித்து இறந்ததால், வேதனையின் உச்சத்துக்கு சென்றார் விவசாயி. இதுகுறித்து ஊமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.