Published on 24/03/2022 | Edited on 24/03/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே டிப்ஸ் பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஊழியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு கோலடியில் உள்ள டாஸ்மாக் கடையில் முனிராஜ் என்பவருக்கும் சக ஊழியரான முனிச்செல்வம் என்பவருக்கும் இடையே டிப்ஸ் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சக ஊழியரான முனிராஜை அடித்துக் கொலை செய்துள்ளார் முனிசெல்வம். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் இடையே ஏற்பட்ட மோதலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கொலை சம்பவமும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.