Skip to main content

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தேர்வு எழுத 5 பேர் கண்காணிப்பு!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020
incident in thirupathur

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை  சேர்ந்தவர்  அனீசூர் ரஹமான், இவர் வாணியம்பாடி  இஸ்லாமிய கல்லூரியில்  இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கரோனா தொற்று பாதிக்கபட்டு கடந்த சில தினங்களாக தனியார் பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை  மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழக அரசு  அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ - மாணவிகளுக்கான தேர்வுகளை நடத்தியது. இறுதியாண்டு மாணவரான ரஹ்மான், தொழில்துறை சட்டம் என்னும் தேர்வு நடந்தது. இதில் கலந்துக்கொண்டு தான் தேர்வு எழுத வேண்டும்மென மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி தலைமையில், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்துக்கொண்டு அந்த மாணவரை தேர்வு நடைபெற்ற மையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் ஆன்லைன் தேர்வில் கலந்துக்கொண்டு தேர்வு எழுதினார். தேர்வு முடியும் வரை மருத்துவ குழுவினர் அங்கிருந்தனர். தேர்வு முடிந்ததும் அவரை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

ஒரு மாணவர் தேர்வு எழுத முயற்சி செய்த மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள், அதிகாரிகளை பாராட்டலாம். அதேநேரத்தில் அந்த மாணவர் ஏற்கனவே கரோனாவால் மன அழுத்தத்தில் இருப்பார். அவர் தேர்வு எழுதுவதே பெரிய விஷயம், அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு பாதுகாப்பு என்கிற பெயரில் 5 பேருக்கு மேல் அவர் இருந்த அறையில் இருந்து அவருக்கு கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்