Skip to main content

போதையில் சண்டையிட்ட மகனை அடித்து கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை

Published on 28/06/2020 | Edited on 28/06/2020
incident in pudukottai

 

கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை விட வறுமையாலும், ஊரடங்காலும் வருமானமின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், குடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மது போதையால் என்ன செய்கிறோம் என்பதை மறந்து ஈடுபடும் சம்பவங்களால் மரணங்களும், கொலைகளும் நடக்க தொடங்கிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகம் மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் சென்னையில் உணவகத்தில் வேலை செய்து வந்தார்,கரோனா ஊரடங்கால் வேலை இழந்து வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். அவரது மனைவி இந்திராகாந்தி, இளைய மகன் அருண்குமார் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

 

incident in pudukottai


அருண்குமார் ஓட்டுநராக வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் போதெல்லாம் குடிபோதையில் தாய், தந்தையிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் சில நாட்களுக்கு முன்பு தாய் இந்திராகாந்தி கோபமாக தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று இரவும் வழக்கம் போல குடிபோதையில் வந்த அருண்குமார் தந்தை பாலச்சந்திரனிடம் சண்டையில் ஈடுபட்ட நிலையில் அதிக கோபமடைந்த தந்தை அருகில் கிடந்த கட்டையை எடுத்து மகன் மண்டையில் அடித்துள்ளார். அதிகமான ரத்தம் வெளியேறி அருண்குமார் இறந்துவிட, மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காத தந்தை பாலச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

incident in pudukottai


கரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு காலத்தில் கடைகளையும் மூடச் சொல்லும் அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை மட்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் மரணங்களாக உள்ளது. அதே போல அறந்தாங்கி அருகில் உள்ள சிலட்டூர் கிராமத்தில் குமார் என்பவர் குடிபோதையில் தனது பக்கத்து வீட்டுக்காரருடன் அரிவாளுடன் சண்டையிட்டு அதில் பக்கத்து வீட்டு பெண் ராணியை அரிவாளால் வெட்டிவிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி மதுவால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்