தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது கேரள மாநில டாக்டரிடம் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சேதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அச்சோதனையின் போது கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரை சேர்ந்த அணில்தாமஸ் என்பவர் கடலூரில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் தனது நன்பரை பார்க்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் தனது நண்பரை பார்த்து விட்டு, தனது சொந்த ஊரான கேரளா மாநிலத்துக்கு வாடகை வாகனத்தின் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்டாச்சியர் முகமது அசேன் மற்றும் உதவி ஆய்வாளர் புருஷேத்தமன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை செய்தனர்.
அப்போது கேரளாவை சேர்ந்த அணில் தாமஸ் என்பவரிடமிருந்து, தேர்தல் விதி மீறியும், தகுந்த ஆவணமின்றியும் கொண்டு சென்ற 6 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து திட்டக்குடி வட்டாச்சியர் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர்.