Skip to main content

''எங்கள் இறப்பிற்கு வறுமையே காரணம்...''- சுவரில் எழுதிவைத்துவிட்டு குடும்பமே தற்கொலை!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

தென்காசி அருகே உள்ள கட்டளை குடியிருப்பு கிராமத்தில் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி கட்ட முடியாமல் ஏற்பட்ட வறுமையால் விபரீத முடிவு…

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைக்குடியிருப்பு கிராம பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (37) ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி (30), இவர்களது மகன்கள் சின்முத்திரன் (5), ஏகாந்தமூர்த்தி (2), இன்று காலையில் கந்தசாமியின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவைத் தட்டியுள்ளனர் ஆனால், கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர்.

 

hh

 

அப்போது கந்தசாமி தூக்கில் சடலமாகக் கிடந்தார். மேலும்அவரது மனைவி விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்தார் மகன் சின்முத்திரன் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். 2 வயது குழந்தை ஏகாந்தமூர்த்தி அழுது கொண்டு இருப்பதைப் பார்த்தனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து புளியரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆய்வாளர் சுரேஷ்குமார் (பொறுப்பு) மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், 2 வயது குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

fg

 

இறந்தவரின் வீட்டில் உள்ள சுவரில், “எங்கள் சாவுக்கு என் வறுமை மட்டுமே காரணம்” என்று எழுதப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கந்தசாமியின் மகன் சின்முத்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்கு அதிகமாக செலவானதால், மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

 

incident in nellai sengkottai


மேலும், மகனை அழைத்துக் கொண்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்ததால் ஆட்டோ ஓட்டும் தொழிலிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையின் கழுத்தை துணியால் நெரித்துக் கொன்று விட்டு, கந்தசாமி தூக்கிட்டும், அவரது மனைவி விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

குழந்தை ஏகாந்தமூர்த்தியை எதுவும் செய்யவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை நலமுடன் இருந்தது. இதையடுத்து, குழந்தையை உறவிர்களிடம் ஒப்படைத்தனர். என்றார் இறந்தவரின் அக்கா, முத்து செல்வி.

மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்