Published on 05/10/2018 | Edited on 05/10/2018
தொடர் மழை காரணமாக சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னை விமான நிலையத்திற்கு விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சில பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டும் மீறி இயங்கி வருவதாக செய்திகள் வர, விடுமுறை அறிவிக்கப்பட்டும் இயங்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.