Skip to main content

'எல்லோரும் ரெடி என்றால் அதிமுகவும் ரெடி'-திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
nn

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், 'விஜய் நடித்த மாநாட்டில் பெரியாருடைய கட்அவுட், காமராஜர் கட் அவுட் உள்ளது. ஆனால் ஏன் அண்ணாவின் கட் அவுட் இல்லை என எங்களுக்கெல்லாம் தெரியவில்லை. மாநாட்டுக்குப் பின்னர் நாம் இதைப்பற்றி பேசலாம். 

பெரிய ஜோசியக்காரராக ஸ்டாலின் இருக்கிறார். கூட்டணி முறியுமா இல்லையா என்று தேர்தலுக்கு முன்பு எதையுமே கணிக்க முடியாது. தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதனால் பொறுத்துதான் பார்க்க வேண்டும். என்ன விவாதம் நடந்தாலும் நிச்சயமாக விரிசல் நடக்காது என்பது அவருடைய (மு.க.ஸ்டாலின்) கொள்கை. ஆனால் விரிசல் வரும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கொள்கை, அவருடைய எண்ணம்.  எங்களுடைய எண்ணமும் அதுதான்.

வைத்திலிங்கம் வீட்டில் மத்திய அரசு சோதனை நடத்துவதை நீங்கள் பார்ப்பது போல் தான் நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார். கூட்டணி என்பது அந்தந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டியது. அதனால் எல்லாரும் தனியாக போட்டி என்றால் அதிமுக முதலில் ரெடியாக இருக்கும். தேர்தல் நேரத்தில் வருகின்ற சூழ்நிலையைப் பொறுத்து தான் கூட்டணி போன்ற விஷயங்கள் கணிக்க முடியும். இப்பொழுது யாரும் ஜோசியம் சொல்ல முடியாது' என்றார்.

சார்ந்த செய்திகள்