Skip to main content

“வலிமையான குழந்தைகளை வளர்க்க கருவுற்ற பெண்கள், பாலூட்டும்  தாய்மார்களை காப்போம்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 15/11/2024 | Edited on 15/11/2024
I Periyasamy said we will protect pregnant women and nursing mothers to raise strong children

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்  இரண்டாம் தொகுப்பை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம்,  வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம்,  பிள்ளையார் நத்தம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி முன்னிலையிலும், பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு  மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையிலும் ‘ஊட்டச்சத்தை  உறுதி செய்’ திட்டத்தின் ஊட்டச்சத்து பெட்டகங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர் இ.பெரியசாமி  பேசும்போது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு  திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்கும் செயல்பாட்டை தொடங்கி மதிய உணவில் ஊட்டச்சத்து நிலையை  ஏற்படுத்தியவர். அவர்கள் வழியில்  முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஏழை,  எளிய மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைத்திட வேண்டும்  என்பதற்காகவும், குழந்தைகள் ஆரோக்கியத்துடனும், சுகாதாரத்துடனும் வாழ  வேண்டும் என்பதற்காகவும், பெண்கள், கர்ப்பிணிகளின் உடல்  ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார்.

தமிழ்நாட்டில் 0-6 வயது வரை குழந்தைகளில் பலரும்  ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவ  உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து  தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் அறிவித்து ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்னும் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை  29.06.2022 அன்று தொடங்கி வைத்தார். இவ்வாறு அரசின் முதற்கட்ட தீவிர  முன்னெடுத்தல் காரணமாக 0-6 வயதுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து  மற்றும் ஆரோக்கியம் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.  ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதம் குழந்தைகள் இயப்பு  நிலைக்கு திரும்பியுள்ளனர். இது அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.

I Periyasamy said we will protect pregnant women and nursing mothers to raise strong children

இதனைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தினை முதலமைச்சர் இன்று அரியலூர்  மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். 0-6 மாத குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுவுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால் ஆரோக்கியத்தை பேணுவது அத்தியாவசியமாகிறது. 0-6 மாதத்திற்குட்பட்ட  குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையின்படி, மாநிலம் முழுவதும் 16,215  குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 50,490 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 915 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 1890 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் என மொத்தம் 2,805 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எனக்  கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான ஊட்டச்சத்து  பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பெட்டகத்திலும் நெய் 500 மிலி,  உலர் பேரீச்சம்பழம் ஒரு கி.கிராம், ஊட்டச்சத்து பவுடர் ஒரு கி.கிராம்,  இரும்புச்சத்து திரவம் 2 பாடடில்கள், பிளாஸ்டிக் கோப்பை 1, காட்டன் துண்டு 1,  பிளாஸ்டிக் கூடை 1 ஆகியவை அடங்கியுள்ளன. குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பறியது. அதிலும் தாயின் உடல் நலனை காப்பது  இன்றியமையாதது. குழந்தை கருவில் உருவான நாள் முதற்கொண்டு  அருகிலுள்ள குழந்தைகள் மையங்களில் பதிவு செய்து அங்கு அளிக்கப்பட்டு  வரும் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கன்வாடி  பணியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர்கள் ஊட்டச்சத்து பெட்டகத்தின் பயன்பாடு மற்றும் பயனாளிகளின் ஆரோக்கிய நிலையினை  தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வார்கள். மருத்துவ உதவிகள்  தேவைப்படின் ஆர்.பி.எஸ்.கே  மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்  மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக அங்கன்வாடி பணியாளரின் இந்த தொடர் கண்காணிப்புகள் உதவிபுரியும். எனவே,  வலிமையான குழந்தைகளை வளர்க்க கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும்  தாய்மார்களை காப்போம். ஒளிமயமாக்குவோம்” எனக்  கூறினார்.

சார்ந்த செய்திகள்