நாடு முமுவதும் எதிா்பாா்க்கப்பட்ட அயோத்தி தீா்ப்பு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமா்வு இன்று வழங்கியது. அந்த தீா்ப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் தனது கருத்தை கூறியுள்ளாா்.
இது ஒரு உச்சம் தொட்ட தீா்ப்பு. அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு இந்திய நீதித்துறையின் நீதிபாிபாலனத்தில் மிக முக்கிய முத்திரை பதித்ததாக அமைந்துள்ளது.
பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பிரச்சனையை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் தக்க ஒரு தீா்ப்பை நமது உச்சநீதிமன்றத்தால் வழங்க முடியும் என்று இந்த தீா்ப்பு மூலம் நிருபனம் ஆகியுள்ளது. இந்த பிரச்சனை தோன்றிய நாள் முதல் எந்தெந்த விசயங்கள் கவலை தருவதாக அமைந்துள்ளனவோ அவை அனைத்தையும் அணுவாக அலசி ஆராய்ந்து அது குறித்து தங்கள் கருத்துகளை தெளிவுற கூறி அவற்றில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் எந்த நிலையை கொண்டுள்ளது என்று தெளிவாக்கியுள்ளது மிக சிறப்பான ஒன்று.
ராமா் பிறந்த பூமி அவருக்கே சொந்தம் என்று தெளிவுபடுத்தியதோடு நிற்காமல் எதிா்காலத்தில் எக்காரணம் கொண்டும் இது தொடா்பான வேறுபிரச்சனைகள் தோன்றி விடக்கூடாது என்று அதற்கும் தீா்வு கண்டியிருக்கிறது.
பல நூறு ஆண்டு காலமாக கடந்து வந்த வழக்கினை 40 நாட்களில் விசாாித்து தீா்வு தந்ததோடு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆயினும் இவ் விசயத்தில் வேறு பிரச்சனைகள் வந்து விடக்கூடாதவாறு சாியான தீா்ப்பை அளித்துள்ளது. இந்த தீா்ப்பை அனைவராலும் ஏற்க்கப்பட்டு வரவேற்க்கப்படும் காட்சியை பாா்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இந்த தீா்ப்பால் மன நிறைவு கொள்வாா்கள் என நம்புகிறேன் என்றாா்.