Published on 01/12/2018 | Edited on 01/12/2018

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு 353.70 கோடியை அறிவித்துள்ளது.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு 15,000 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கவேண்டும் தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதனை அடுத்து 200 கோடியை மின் சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு அண்மையில் வழங்கிய நிலையில், தற்போது 353.70 கோடியை மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.