Skip to main content

அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழிபெயர்த்தேன்: எச்.ராஜா

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
h.raja



அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழிபெயர்த்தேன். நான் திருத்திக்கூறியதாக கூறுகிறார்கள் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
 

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிலருக்கு அச்சம் உள்ளது. இதற்கு முன்பு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது விவசாய நிலங்கள் 3,800 எக்டேர் கையகப்படுத்தப் பட்டது. ஆனால் தற்போது கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் 400 எக்டேர் தான். அவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலங் களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
 

 

 

நாட்டின் முன்னேற்றத்துக்கு நிலம் அளிக்கும் விவசாயிகள் நிர்க்கதியாக விடப்படமாட்டார்கள். விவசாயிகள் அந்த திட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை. ஒரு சிலரை தூண்டி விட்டு தி.மு.க. மற்றும் சமூக விரோத சக்திகள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் தூங்கிய தமிழக அரசு, இந்த திட்டத்தில் விழித்துக்கொண்டுள்ளது. அரசு திட்டங்களுக்கு எதிராக பிரச்சனையை கிளப்புபவர்கள், அவர்களுக்கு பண உதவி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 
 

 

 

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழிபெயர்த்தேன். நான் திருத்திக்கூறியதாக கூறுகிறார்கள். நான் வழக்கத்தில் உள்ளதைத்தான் கூறினேன். சிறு நீர்ப்பாசன திட்டம் என்று தான் தெரிவித்தேன். ஆனால் அதை தவறாக கூறுகிறார்கள். இது குறித்து வலைதளங்களில் தவறாக பரப்புகிறார்கள். அதற்கு தி.மு.க. பண உதவி செய்கிறது. இவ்வாறு கூறினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்