Skip to main content

தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட விவகாரம் - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

h

 

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தைத் தெலுங்கில் டப்பிங் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன், அவரது மனைவி சாந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 

தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தெலுங்கில் டப்பிங் செய்தது தவறானது தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். இந்த வழக்கில் தானா சேர்ந்த கூட்டம் பட இயக்குனர் தயாரிப்பாளர் சார்பாக வக்கீல் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி டப்பிங் செய்யப் படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்றார். இதை  நீதிபதி ஏற்றுக் கொண்டு, தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தெலுங்கு டப்பிங் செய்ய முழு உரிமை உள்ளது, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்புக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்