![erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/-Kt7OFl3aVxS1_eY1Qel_5umtIfdyLXtYT9M4l59hS0/1738759356/sites/default/files/inline-images/a2450.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முன்னதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை காண்பிக்குமாறு அங்கு குவிந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் சிறிது பதற்றம் ஏற்பட்டது.
5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 64.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆறு மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 57.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.