இன்று (18.11.2021) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் நான்கு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்குக் கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் மயிலாப்பூர், மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்துவருகிறது. அதே போல் காசிமேட்டில் கடற்கரை கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.