
மதுரையில் கண்மாயில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பெருங்குடி காவல் வட்டத்திற்குட்பட்ட ஈச்சனேரி பகுதி கண்மாய் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது. பாதி எரிந்த நிலையில் முகம் முழுவதும் சிதைந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்திருக்கும் நிலையில், அங்கு பதிந்த வாகனத்தின் டயர் அச்சுகளை வைத்தும், மோப்பநாய் உதவியுடனும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்து பின்னர் சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.