Skip to main content

கிறிஸ்தவ திருமணங்களுக்கு பதிவுச் சான்றிதழ்!- பதிலளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவு!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

கிறிஸ்தவ திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக்கூடிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழகப் பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகம் முழுவதுமுள்ள பிஷப்புகளும், பாதிரியார்களும் இந்திய கிறிஸ்தவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக்கோரி பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்‘கிறித்துவ திருமணங்களைப் பதிவு செய்ய பதிவுத்துறை மறுக்கிறது. 

Christine marriage registration certificate high court



இது தொடர்பாக நான் அனுப்பிய மனுக்களுக்கு எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து சான்றிதழ் வழங்கவேண்டும்’எனக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள்  சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கிறிஸ்தவர்களுக்கு நடத்தப்பட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களைப் பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனைப் பதிவு செய்வது இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 

இதையடுத்து நீதிபதிகள் இம்மனுவிற்கு டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி, தமிழக பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 

Next Story

‘3ஆம் பாலினத்தவர் உள் இடஒதுக்கீடு ரத்து’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Court action order on Cancellation of seat reservation for 3rd gender

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்‌ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (02-06-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.