Skip to main content

சாப்பிட்டால் "ஆல்டோ" கார்..!!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
hotel


"எங்களுடைய உணவகத்தில் சாப்பிட்டால் ஆல்டோ கார், சைக்கிள்கள், மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளப் பரிசுகள் உங்களுக்கு உண்டு." என வாடிக்கையாளர்களை கவரும் விதமாக விளம்பரப்படுத்தியுள்ளனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள உணவக விடுதி ஒன்று.

கொல்லன் தெருவில் ஊசி விற்கப் போகக் கூடாது என்பது பழமொழி. ஆனால் வாடிக்கையாளரைக் கவரும் தந்திரம் இருந்தாலே போதும் எங்கும் எதுவும் விற்று விடலாம் என்பது நவீன யுக்தி. அதாவது செட்டிநாட்டில் சாப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தெருவிற்கு பத்து சமையற்கலைஞர்கள் இருப்பார்கள். அத்தகைய செட்டி நாட்டில் சிறந்த உணவினைத் தருகின்றோம்.! அது போக வாடிக்கையாளர்களாகிய நீங்கள் வந்து சிறப்பித்ததற்கு, பரிசுகளையும் தருகின்றோம் என செட்டி நாடான காரைக்குடியில் புதிதாக உணவக விடுதியினை அமைத்துள்ளனர்.

மேலும், 23/08/2018 தொடங்கி 31/012/2018 வரை ரூ.300 மதிப்பிற்கு உணவருந்தும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுக்கூப்பன் ஒன்றை வழங்கி, 1/1/2019 அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் முதல் நபருக்கு மாருதி ஆல்டோ கார் ஒன்றையும், ஏனையோருக்கு சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களான குக்கர் மிக்ஸி வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். இதற்காக பரிசு கொடுக்கப்படவுள்ள ஆல்டோ காரை உணவக விடுதி முன் நிறுத்தி வைத்துள்ளனர் அவர்கள். இந்த சமயோசித விளம்பர யுக்தியால் விடுதி வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகின்றது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்