Skip to main content

வைரலாகும் எச்.ராஜாவின் உளறல்

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
raja2

 

 

 

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக உயர்மட்டக்குழு  மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். அமித்ஷாவின் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்த்தா பாஜக தேசிய  செயலாளர் எச்.ராஜா.

 ’அதாவது சிறுநீர் பாசன திட்டங்களுக்காக 332 கோடி கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற எச்.ராஜாவின் மொழி பெயர்ப்புதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  


சொட்டு நீர் பாசனம் என்று சொல்லுவதற்கு பதில் சிறுநீர் பாசனம்  என்று மொழி பெயர்ப்பில் உளறியதால் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு பரிந்துரை; பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 BJP Strong opposition on Retired Justice Chanduru Committee Recommendation

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒய்வுபெற்ற கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று (18-06-24) சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலையில், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர் இன்று (19-06-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஹெச்.ராஜா, “மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாது என எப்படி சொல்லலாம்?. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஹிந்து மக்களை குறிவைத்து இது போன்று பரிந்துரை செய்துள்ளார். இதை ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு அவர் கொடுத்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மேலும், இந்தப் பரிந்துரைகளை மாநில அரசு கண்டிப்பாக ஏற்கக் கூடாது” என்று பேசினார். 

Next Story

'எல்லாம் சமஸ்கிருதமா?'-அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
'Everything is Sanskrit?'- Tamil Nadu Chief Minister's letter to Amit Shah

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில், 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.