Skip to main content

ஆளுநரின் தேநீர் விருந்து; திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
nn

குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது நடைமுறையான ஒன்று. வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.

ஆளுநர் கொடுக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக தற்பொழுது அறிவித்திருந்தது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் தமிழர் நலனுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் உள்ள விசிகவும், சிபிஎம் கட்சியும்  தற்போது அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் குடியரசு தினத்திற்கான ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

சார்ந்த செய்திகள்