Published on 12/12/2018 | Edited on 12/12/2018
![gaja](http://image.nakkheeran.in/cdn/farfuture/3WITSjSf2I6WFG3iqOC-_X3HxwKNIZn1T_a8QQvS7HA/1544620020/sites/default/files/inline-images/gaja_7.jpg)
கஜா புயல் நிவாரணம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புயல் இழப்பு குறித்து மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு இன்னும் தமிழக அரசு விளக்கம் தரவில்லை எனவும் கூறியுள்ளது. இதற்கு தமிழக அரசு, மத்திய குழு கேட்ட சந்தேகங்களுக்கு இன்றே விளக்கம் தரப்படும் என உறுதியளித்துள்ளது. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு எவ்வளவு காலமாகும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.