
இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுளளதாக கூறினார்.மேலும் கூறுகையில்,
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உள்ள ஒன்று. விஷால் மீது குற்றச்சாட்டு இருப்பதாக கூறினால் அந்த குற்றச்சாட்டு என்ன என ஆராய அவர்களுக்கு இடங்கொடுக்கும் மனப்பான்மை அவருக்கு இருக்கும் என நான் நம்புகிறேன்.
சீதக்காதி படத்திற்கு மட்டுமல்ல இதற்கு ஆரம்ப விழா செய்துவைத்தது என் படங்கள்தான். இப்படி தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு தடை கேட்பது வருத்தத்திற்கு உரியது. படத்தை பார்த்துவிட்டு கருத்து தவறாக இருந்தால் சொல்லலாம். ஆனால் படத்தையே பார்க்காமல் எல்லாமே தப்பு என்று சொன்னால் ஒன்றும் பேசவே முடியாது. நாடு முழுவதும் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக்கூறினார்.