Skip to main content

இலவச பேருந்து பயணமும், தங்கதேரும் – ரஜினி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் ரசிகர்கள்

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ரஜினியின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், கோயிலில் சிறப்பு பிரார்த்தனைகள் என கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday


வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ரஜினி மக்கள் மன்றத்தினர், அவர்களது ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர். ஆற்காடு நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், ஆற்காடு நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கலவை வரை செல்லும் தனியார் பேருந்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு பயணம் செய்யும் அனைவருக்கும் இலவச பயணத்தினை ஏற்பாடு செய்து தந்துள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday


வேலூர் மாநகர ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் வேலூர் கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தி, ரஜினி நலமுடன் வாழ வேண்டும்மென வேலூர் ஒருங்கிணைந்த மா.செ சோளிங்கர் ரவி, இணை செயலாளர் நீதி தலைமையில் தங்கத்தேர் இழுத்தனர். மேலும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர்.

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday

 

 

 Free bus ride... Fans celebrating Rajini's birthday

 

அதோடு, சோளிங்கரில் உள்ள அருள்மிகு சோழபுரீஸ்வரர் ஆலயத்தில், லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அன்னதானம் வழங்கினார்கள் சோளிங்கர் ஒன்றிய மக்கள் மன்றத்தினர். குடியாத்தம் பகுதி மக்கள் மன்ற நிர்வாகிகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள மரக்கன்று வழங்குதல் என போன்றவற்றை செய்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பிறந்தநாளை கொண்டாடுவது என முடிவு செய்துள்ளனர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்