Published on 23/07/2021 | Edited on 23/07/2021

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் 25- ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கான அவகாசம் நாளையுடன் (24/07/2021) முடிவடையும் நிலையில் 11 வது முறையாக ஆணையத்திற்கு மேலும் ஆறு மாதம் அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.