கோவை மாவட்டம்மேட்டுப்பாளையத்தில் அடுத்த நடூர் பகுதியில்பெய்த தொடர் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

coimbatore district mettuppalayam area wall collapsed incident a

Advertisment

இந்நிலையில் சுற்றுச்சுவர் வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் தெரிந்தே மரணம் ஏற்படுத்தியதாக வழக்கு பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் 304(a)பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக மரணம் விளைவித்ததாக முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவை மாற்றி 304(2) என்ற பிரிவின் கீழ் தெரிந்தே மரணம் என்று வழக்கு மாற்றப்பட்டுள்ளது.