Published on 04/07/2023 | Edited on 04/07/2023
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ளது ஸ்ரீ சேவக மூர்த்தி அய்யனார் கோவில். இந்த கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிலாகும். இக்கோவில் திருவிழாவின் ஒன்பதாவது நாளில் தேர் ஊர்வலம் நடைபெறும். அதன்படி தேர் ஊர்வலம் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள வடம்பிடித்து இழுத்து வரப்பட்டு இறுதியாகத் தேர் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. தேர் நிறுத்தப்பட்டவுடன் நேர்த்திக்கடனாக சுமார் 5 லட்சம் தேங்காய்கள் நிலை சுவர் மீது தொடர்ச்சியாக வீசி அடித்து நொறுக்கப்பட்டது. அப்பொழுது தேங்காய் உடைபடும் சுவருக்கு அருகிலேயே தலையில் காயம்பட்டுவிடக்கூடாது என ஹெல்மெட் அணிந்து கொண்டு குவிந்த மக்கள் கூட்டமாகப் பதுங்கி, உடைந்த தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி பையில் சேகரித்து எடுத்துச் சென்றனர்.