Published on 22/05/2018 | Edited on 23/05/2018
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது தடியடி, கல்வீச்சு, கண்ணீர்புகை, போலீசாரின் துப்பாக்கிச்சூடு என்று போர்க்களமானது தூத்துக்குடி. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து மம்தா பானர்ஜி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது:
’’தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். ’’