Published on 10/12/2019 | Edited on 10/12/2019
தமிழகத்தில் மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ், அழகிரி தலைமையி்ல் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திண்டுகல்லில் நடைபெற்றது.

இந்த ஆலோடனைக் கூட்டத்திற்கு நடுவே மேடையில் பெயரை கூறவில்லை என்ற காரணத்திற்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் அப்துல்கனி ராஜா மற்றும் சுப்பிரமணி இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.