![Father, son passed away by current](http://image.nakkheeran.in/cdn/farfuture/JzPxaj0EVQd5AprcvAhu6n8k4OzLedG88zb6TQJsLd4/1633953408/sites/default/files/inline-images/father-and-son-passed.jpg)
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கீழப்பழுவூா் அருகேயுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்த நாராயணன் மகன் முத்துசாமி(47), அவரது மகன் சங்கர்(19) ஆகியோர் வெள்ளிக்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், அவர்களது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் விபத்து இழப்பீடு தொகை (நபருக்கு ரூ.5 லட்சம் வீதம்) ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, திருமானூர் ஒன்றியக் குழு தலைவர் சுமதி, தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற் பொறியாளர் (அரியலூர்) செல்வராஜ், திருமானூர் உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.