Skip to main content

மண்டையோடுகளுடன் விவசாயிகள் போராட்டம்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

FARMERS TRICHY UNION GOVENRMENT AND MEKADATHU DAM

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ரவுண்டானா பகுதியில் விவசாயிகள் நேற்று (10/08/2021) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; தச்சங்குறிச்சி பகுதியிலுள்ள செட்டி ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாசன வாய்க்கால்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்; லால்குடி பகுதியில் உள்ள வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தங்கள் கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
NEET exam results should not be cancelled central govt insistence on the SC

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், “இளநிலை நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தேர்வை எழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு தீவிரமான விளைவுகளை கொண்ட ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 

NEET exam results should not be cancelled central govt insistence on the SC

எந்தவொரு தேர்விலும் வினாத்தாள்களின் ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  சில குற்றவியல் கூறுகளின் பேரில் சில குற்றச்செயல்கள் காரணமாக, ரகசியத்தன்மை மீறப்பட்டால் இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அந்த நபர் மீது சட்டத்தின் முன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்தல், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என மத்திய அரசு  தனது பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி; லால்குடியில் பரபரப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A rowdy who was shooted; There is excitement in Lalgudi

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.