![Extortion of money on the pretense of watching a films; A gang that cheated on cybercrime people](http://image.nakkheeran.in/cdn/farfuture/lLTpVtuN99aLvNdHyOHl-0NdA0_2uh9XJJoiloXFqsQ/1708014317/sites/default/files/inline-images/a4907.jpg)
சில மாதங்களுக்கு முன்பு கோவையில் தன்பாலின ஈர்ப்பாளர்களைக் குறிவைத்து ஆசை வார்த்தை காட்டி, மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஆபாசப் படம் பார்ப்பதாக மிரட்டி ஒருவரிடம் இளைஞர் கும்பல் பணம் பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் லாலா ராய் என்ற நபரிடம், நாங்கள் சைபர் கிரைம்மில் இருந்து பேசுகிறோம். உங்களை கண்காணித்ததில் நீங்கள் மொபைல் போனில் ஆபாச படம் பார்க்கிறீர்கள். அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சிலர் மொபைல் போனில் பேசியதோடு நேரில் சென்று 41,640 ரூபாயை பறித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையில் புகாரளித்த நிலையில், கோவை வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.