Skip to main content

மத்திய பாதுகாப்புப்படை போலீசாருடன் வெள்ளாற்றில் இறங்கிய இ.டி அதிகாரிகள்

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

nn

 

அண்மையில் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தற்போது அரியலூர் மாவட்டத்திலும் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

அரியலூர் மாவட்டம் தளவாய் ஊராட்சிக்குட்பட்ட சேந்தமங்கலம் அடுத்துள்ள திருப்பனூர் கிராமத்தை ஒட்டிச் செல்லும் வெள்ளாற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 5 கார்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலமாகவும் அளவீட்டு கருவிகள் மூலமும் மணல் குவாரியில் ஆய்வு செய்தனர். எந்தெந்த பகுதிகளில் ஆழமாக மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு மீட்டர் ஆழத்தை விட 13 அடி ஆழம், 15 அடி ஆழம் வரை விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்