![``enga Sami Edappadi Palaniswami''- arrangement to welcome with drum beat](http://image.nakkheeran.in/cdn/farfuture/lpKNmFa8cRYQjVOE4K_47PCc1wN1AvHPkvjQFnJ4b-o/1662613018/sites/default/files/inline-images/n1038_0.jpg)
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கில் 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்' என தீர்ப்பு வழங்கப்பட்டது.
![``enga Sami Edappadi Palaniswami''- arrangement to welcome with drum beat](http://image.nakkheeran.in/cdn/farfuture/fWGtpgeO0BgqjoYSB9kuXDa3FKZYW8fyb00-pqhCxIc/1662613058/sites/default/files/inline-images/n1037_0.jpg)
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புகள் மேற்கொண்டு வருகிறது. அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். செண்டை மேளத்துடன் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனரில் 'அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வரும் எங்கள் சாமி எடப்பாடி பழனிசாமி' என வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தமிழக டிஜிபியிடம் எடப்பாடியை தலைமை அலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது என புகாரளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.