
நெல்லை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் புஷ்கரணி விழாவில், குறிப்பிட்ட இரண்டு இடங்களைத் தவிர மற்றைய இடங்களில் விழாவினை சிறப்பாக நடத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபகர் தெரிவித்துள்ளார்.
"தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது. கோவில் பழக்க வழக்கத்திற்கு எதிராக செய்யக்கூடாது. பருவமழை காலத்தில் ஆற்றில் அதிகம் தண்ணீர் செல்லும் போது நீராடுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம்." இதனால் இந்த விழாவினையேத் தடைசெய்ய வேண்டுமென ஒரு சாரார் எதிர்ப்புக்காட்டி வந்த நிலையில், " திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் எதிர்வரும் 12-10-18 முதல் 23-10-2018 வரை 18 இடங்களில் புஷ்கரணி திருவிழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள் திட்டமிட்டுள்ளது. இதில் திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை மற்றும் பிள்ளையார் கட்டளைக்குச் சொந்தமான நெல்லையப்பர் திருக்கோயில் படித்துறையிலும் புஷ்கரனி திருவிழா நடைபெறும் காலங்களில் வெள்ள பெறுக்கு இருக்கும் என்பதால் அந்த இரு இடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வில்லை மற்ற அனைத்து இடங்களிலும் நடத்த எவ்வித தடையும் விதிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பல்வேறு ஆன்மிக அமைப்புக்களும் இதனை வரவேற்றுள்ளன.