Skip to main content

போதை கணவர்; முகத்தில் சுடு ரசத்தை ஊற்றிய மனைவி! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

drunken  Husband trouble

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள ஜெயம்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(30). இவரது மனைவி குப்பம்மாள்(28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நடராஜன் செஞ்சி பேருந்து நிலையத்தில் தின்பண்டம் விற்பனை செய்து வருகிறார். சமீபகாலமாகச் சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு மது குடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. 

 

ஒரு முறை நடராஜன் மதுபோதையில், மனைவி குப்பம்மாள் முகத்தில் பிளேடால் கீறியுள்ளார். இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குப்பம்மாள் புகார் அளித்து மகளிர் போலீசார் அப்போது இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் நடராஜன். அதோடு மனைவியிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குப்பம்மாள், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை எடுத்து கணவன் முகத்தில் வீசியுள்ளார். அந்த சூடு தாங்கமுடியாமல் நடராஜன் அலறித் துடித்துள்ளார். 

 

அதன்பிறகே தானே செஞ்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மனைவி மீது புகார் அளித்துள்ளார். நடராஜன் நினலயை பார்த்த அங்கிருந்த மகளிர் போலீசார், அவரை வலுக்கட்டாயமாகச் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மது போதையில் இருந்ததால் சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்து வெளியே வந்துவிட்டார் நடராஜன். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீர் கிணற்றில் மனித கழிவா? விழுப்புரம் ஆட்சியர் விளக்கம்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
as

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணறு ஒன்றில் மனித கழிவு மிதப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பழனி, இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கமளித்துள்ளார்.

அதில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினரை அனுப்பி சம்மந்தப்பட்ட குடிதண்ணீர் கிணற்றைப் பார்வையிட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் கிணற்றில் உள்ள நீரை எடுத்து பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிணற்றில் மிதந்த பொருள் ஒரு தேன் அடை என்பதும் கண்டறியப்பட்டது. பின்பு கிராம மக்கள் முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து தேன் அடை எடுக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக கிணற்றின் மீது இரும்பு கம்பி வேலி அமைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.