சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிகப்பு கலர் ஜீப்( தார்) ஒன்று மக்கள் நிறைந்த குறுகிய சாலையில் வேகமாக வந்துள்ளது. அப்போது கோவில் குளத்து தெருவில் அதிவேகமாக திரும்பியபோது அங்கிருந்த 2 கார் மற்றும் மின்மாற்றியில் மோதியுள்ளது. 2 கார்களும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மின்மாற்றியின் மின்கம்பங்கள் உடைந்து தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.
பின்னர் பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன் மின் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன பேரில் மின் துறையினர் சம்பந்தபட்ட பகுதிக்கு வந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்கள் நடவடிக்கை தாமதம் ஏற்பட்டிருந்தால் மின் ஒயர்கள் அருந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் காரில் இருந்து திரும்பியவர் நிதானம் அற்ற நிலையில் போதையில் இருந்தார் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்க வேண்டாம் இதனைச் சரி செய்து கொடுத்து விடுகிறேன் என காரில் வந்த நபர் கூறியதால் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட கார் சேதமானவர்கள், மின்துறை அதிகாரிகள் புகார் அளிக்கவில்லை. இதனை பேசி முடித்து விட்டனர் என்கின்றனர்.
மேலும் மக்கள் நிறைந்த மிகவும் குறுகலான சாலையில் ஜீப்பில் வேகமாக திரும்பியதால் இப்படி விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் குழந்தைகளோ அல்லது முதியவர்களோ சாலையில் வந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். உயிர் சேதமானால் யார் பொறுப்பேற்பது. காசு இருந்தால் அவர்கள் எது வேணாலும் செய்து விடுவார்களா? எனவே சம்பந்தப்பட்டவர் குமராட்சி ஒன்றிய திமுக அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இது போன்ற சம்பவம் பணம் இருப்பதால் மீண்டும் நடக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கச் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொது மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தால் இது குறித்து முழு விவரம் தெரிய வரும் என்று கூறுகின்றனர்.