Published on 22/03/2022 | Edited on 22/03/2022
தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. கரூரில் குளித்தலை, மேட்டு மருதூர், தண்ணீர்பள்ளி பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. சேலத்தில் 5 ரோடு, கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பொழிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், பாண்டமங்கலம், குச்சிபாளையம், அனிச்சம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், மெய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பொழிந்தது.