Skip to main content

ஓட்டுநர் மணி தீக்குளிப்பு - குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
ஓட்டுநர் மணி தீக்குளிப்பு - குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!



சென்னையில் வாடகை கார் ஓட்டுநர் மணி தீக்குளித்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனார்.

சென்னை திருவான்மியூர் பழைய மகாபலிபுரம் சாலையில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வலியில் வந்த வாடகை கார் ஓட்டுநர் மணிக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாத்தில், போலீசார் கார் ஓட்டுநர் மணியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மணமுடைந்த ஓட்டுநர் மணி, காரின் உள் இருந்த பெட்ரோலை எடுத்து சாலையிலே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இன்று கார் ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டியதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் உட்பட காவலர்கள் மணிகண்டன், தமிழ்செல்வன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் பிரிவு 306ன் கீழ் தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இந்நிலையில், ஓட்டுநர் மணியின் குடும்பத்தினர் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், மணி 3 வருடத்திற்கு மேலாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது வருமானத்தை வைத்தே எங்கள் குடும்பம் இயங்கி வந்தது. அவருக்கு என்ன ஆனாலும் தமிழக அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மணியின் அம்மா வசந்தா, அக்கா ஜகதீஸ்வரி ஆகியோர் இந்த புகார் மனுவை அளித்தனர்.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்