Skip to main content

நடிகர்களை நம்பாதீங்க... ரஜினியால முதல்வரா ஆகமுடியாது: ராதாரவி பேச்சு

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
radha ravi


தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் நகர தி.மு.க. சார்பில் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது. 

 

 

 

கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசியதாவது:-
 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 15 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாடு, மொழி காப்பாற்றப்படும். நடிகர்களை யாரும் நம்பி விடாதீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். ஜல்லிக்கட்டுக்காக மாணவ சமுதாயம் போராடி வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட மாணவர்கள் சினிமாகாரர்கள் பின்னால் சென்று விடாதீர்கள்.

 

 

 

காவிரி பிரச்சினைக்காக மு.க.ஸ்டாலின் திருச்சி முக் கொம்பில் இருந்து கடலூர் வரை பிரசார பயணம் மேற்கொண்டார். ஆனால் இதை பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்கிறார். தனியாக பாரதீய ஜனதா கட்சியால் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது.

 

 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்களை தீவிரவாதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார். ஆனால் சினிமாவில் மட்டும் போராட வேண்டும் என்கிறார். நடிகர் ரஜினிகாந்த்தால் அரசியலில் வெற்றி பெற முடியாது. அவரால் முதல்-அமைச்சர் ஆக முடியாது. மத்திய அரசுடன் சேர்ந்து அவர் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவது தி.மு.க. தான். முதல்-அமைச்சர் ஆவதற்கு தகுதியுள்ளவர் மு.க.ஸ்டாலின் தான். நடிகர் கமல்ஹாசனும் ஏதேதோ பேசி வருகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும். இவ்வாறு பேசினார்.
 

சார்ந்த செய்திகள்