
மாநிலங்களவைக்கு திமுகவின் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்எ.ம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்வாக இருக்கிறார்.
செப்.13 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான மூன்று இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் சுயேட்சையாக மூன்று பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழியாதது, வைப்புத்தொகை செலுத்தாது ஆகிய காரணங்களுக்காக அந்த மூன்று சுயேட்சை போட்டியாளர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.