வாரிசு அரசியலை பா.ஜ.க. ஒழிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக மக்களுக்கும், தி.மு.க.விற்குமான உறவு என்பது மலைக்கோட்டைகளை விட வலிமையானது. வாரிசு அரசியல் விமர்சனம் முன் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மை விலைக்கேட்ட நகைச்சுவை போல் உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகாரா? தி.மு.க. மீது அவதூறுகளைப் பரப்ப நினைத்து திசை திருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள். எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள். தைத்திங்கள் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாக பரப்புரையைத் தொடங்குகிறேன். தி.மு.க.வின் வெற்றிப்பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்.' என குறிப்பிட்டுள்ளார்.