Published on 25/08/2020 | Edited on 25/08/2020
![dmk mk stalin MLAs chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/IlUsnzNYkYNwfgqI0mIT0QQura86FD8Do2XLmOUoACg/1598322847/sites/default/files/inline-images/mk%20stalin%20%281%29.jpg)
உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று (25/08/2020) தீர்ப்பு வழங்குகிறது.
2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்ததாக ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தனி நீதிபதியின் தடையை எதிர்த்து நீதிபதிகள் அமர்வில் சட்டப்பேரவை செயலர் மேல்முறையீடு செய்திருந்தார்.
![dmk mk stalin MLAs chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/i7w-0Dj7h9rlGa23esqgFWxT0UPd1K0T0UE7JNyZg_0/1598322917/sites/default/files/inline-images/madras5633_6.jpg)
இந்த நிலையில், இது தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வு இன்று (25/08/2020) தீர்ப்பளிக்க உள்ளது.