Published on 25/02/2021 | Edited on 25/02/2021
திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 7ம் தேதி நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.