Published on 28/12/2018 | Edited on 28/12/2018
தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்காக திருச்சி சென்றபோது, 1953-ம் ஆண்டு கலைஞர் தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், கலைஞருடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரை சேர்ந்த செபஸ்தியன் என்ற ராசுவின் ஏழ்மை நிலைமை அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை அழைத்த மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.