திருவாரூர் மாவட்டத்தில் விளத்தூர், மன்னார் குடி, ஆப்பக்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி மற்றும் ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதியன் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்கள் தங்களுக்கு அதியன் பழங்குடியினர் என்ற சாதிச் சான்று கேட்டு வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரியச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் கடந்த 8 நாட்களாகப் பெற்றோர்கள் தலைமையில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரியச் சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் (T.C.) கேட்டுப் பெற்றோர்கள் இன்று (04.02.2025) போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.